Pages

Sunday, May 27, 2012

உருளைக்கிழங்கு போலி

தேவை :
கடலைப்பருப்பு  -  1 மேஜைக்கரண்டி
உளுந்தம்பருப்பு  -  1 மேஜைக்கரண்டி
முந்தரிப்பருப்பு   -  10
மைதாமாவு          -  2 கப்
பச்சைமிளகாய்   -  1
கடுகு                         -  1 தேக்கரண்டி
உப்பு                           -  1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்   -  2 மேஜைக்கரண்டி
உருளைக்கிழங்கு  - 10
மல்லியிலை            -  சிறிது
கருவேப்பில்லை    -  சிறிது

செய்முறை:

# வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சைமிளகாய்,கருவேப்பில்லை,மல்லியிலை,போட்டு வதக்கி அதனுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு,
உப்பு ,மஞ்சள்,பொடி செய்த தூள் கலந்து கிளறி  இறக்கி வைக்கவும்.  
# மைதாமாவில் உப்பு,சிறிது எண்ணெய் தண்ணீர் சேர்த்து போளிக்கு மாதிரி பிசைந்து வைத்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். 
# ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கையில் விரித்து நடுவில் சிறு பூரணத்தை வைத்து மூடி போளிக்கு மாதிரி இலையில் விரித்து கொள்ளவும்.
# தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் போலியை போட்டு சுற்றி டால்டா அல்லது  நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான உருளைகிழங்கு போலி சாப்பிடுவதற்கு தயார்.



0 comments:

Post a Comment